/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதியில் நிறுத்தப்பட்ட ரோடு பணி : பள்ளங்களில் விழுந்து காயமடையும் மாணவர்கள் அவதி

ADDED : செப் 15, 2011 09:13 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட சில வார்டுகளில் ரோடு பணி முழுமையாக முடிக்கவில்லை.
பணி முடிந்ததாக கூறிய ஒப்பந்ததாரர்களை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுத்தில் ரோடு அமைப்பதற்காக பல கோடியில் பணிகள் துவங்கப்பட்டது. பணியை முடிப்பதைவிட பல லட்சங்களை சுருட்டுவதில் தான் நகராட்சியில் பெரும் போட்டி ஏற்பட்டது. அதன்விளைவு 16வது வார்டு வள்ளல்பாரி வடக்கு தெரு, காளிகாதேவி தெற்கு தெரு இணைக்கும் ரோட்டை இணைக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளனர். ரோடுகள் குண்டும், குழியுமாகி கற்கள் பெயர்ந்துள்ளன. இப்பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ரோட்டில் உள்ள பள்ளங்களில் விழுந்து காயமடைகின்றனர். சிறு மழை பெய்தாலே ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி ரோடு பணியை விரைவில் முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.