/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் சிலம்ப போட்டி
/
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் சிலம்ப போட்டி
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் சிலம்ப போட்டி
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் சிலம்ப போட்டி
ADDED : அக் 21, 2024 04:43 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் மதுரை சகோதயா அமைப்பு சார்பில் சிலம்பம் போட்டி நடந்தது.
தமிழர்களின் தற்காப்பு கலைகளில் முதன்மையானதும், போர்க்கலையாக மட்டுமின்றி மனிதர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக சிலம்பம் அமைந்துள்ளது. இந்த சிலம்பம் போட்டி ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயா பள்ளியில் நடந்தது. போட்டியை பள்ளி மேலாளர் பிரம்மச்சாரி லட்சுமி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கோகிலா, துணை முதல்வர் பாலவேல் முருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் எம்.தினேஷ்குமார், நாட்டுப்புற கலை வளர்ச்சி மைய கலை வளர்மணி லோக சுப்பிரமணியன், கண்ணாடி வாப்பா பள்ளி முதல்வர் பிரமோதா ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசும் வழங்கப்பட்டது. போட்டியை சிறப்பாக நடத்திய பள்ளி விளையாட்டுத்துறை ஆசிரியர்களான சர்மா, பேபிஷாலினி ஆகியோரை பள்ளி மேலாளர் லட்சுமி பாராட்டினார்.