/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
/
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : டிச 18, 2024 07:33 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையங்களில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கினர்.
சமீப காலமாக பொதுமக்களிடம் நுாதன முறையில் மோசடி செய்கின்றனர். அதிக வட்டி தருவதாகவும், பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும் மக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சந்தீஷ் எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி மக்கள் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. அரசு வங்கிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே மக்கள் நிதியை முதலீடு, சேமிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.