/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பா.ஜ., நிர்வாகி கொலையில் 4 பேருக்கு ஆயுள் ஒருவருக்கு 7; 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : நவ 07, 2025 02:03 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பா.ஜ., நிர்வாகி ரமேஷ் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, ஒருவருக்கு 7 ஆண்டுகள், மேலும் இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முதுகுளத்துார் தாலுகா புழுதிக்குளம் சந்திரன் மகன் ரமேஷ் 30. இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞர் அணித் தலைவராக பொறுப்பு வகித்தார். இவர் 2015 நவ.,23 இரவு காரில் சென்ற போது பரமக்குடி -- முதுகுளத்துார் ரோட்டில் தென் பொதுவக்குடி அருகே ஒரு கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது. பரமக்குடி தாலுகா போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் ஒரு மாதத்திற்கு முன் ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் பாலகிருஷ்ணனின் 59, டிரைவர் தேவராஜ் காரில் சென்ற போது ரமேஷ் காரில் உரசியது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த விரோதத்தில் தேவராஜ், அவரது தந்தை வேலுசாமி சதி செய்து நண்பர்கள் மற்றும் பாலகிருஷ்ணன் நிதியுதவியுடன் ரமேைஷ வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இவ்வழக்கில் தேவராஜ், பாலா, வேலுசாமி, பாலகிருஷ்ணன், தவமணி, சுரேஷ் குமார், மகேந்திரன் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நடந்த நிலையில் தேவராஜ், பாலகிருஷ்ணன் இறந்து விட்டனர். மூவர் போலீசாரால் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் நேற்று நீதிபதி மெகபூப் அலிகான் தீர்ப்பளித்தார். பாம்புவிழுந்தான் பாலா 52, பொன்னையாபுரம் வேலுசாமி 65, திருமுருகன் 32, கருணாகரன் 32, ஆகியோருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை, மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.44 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள் மடை தவமணிக்கு 64, ஏழு ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதமும், பரமக்குடி பொன்னையாபுரம் மகேந்திரன் 53, காட்டு பரமக்குடி சுரேஷ்குமாருக்கு 50, தலா 5 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது.