ADDED : நவ 07, 2025 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் நாய் கடித்து பலியானது.
பரமக்குடி சுற்றுவட்டாரப்பகுதி கிராமங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்த காட்டில் ஏராளமான புள்ளி மான்கள் வசிக்கின்றன. இவை தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளில் வருகின்றன. நேற்று காலை பெருங்கரை பகுதியில் புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. இதனை நாய் விரட்டிக் கடித்துள்ளது. நான்கு வயதுள்ள ஆண் புள்ளி மான் பலியானது.

