/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நோய் பரப்பும் மையமாக ராமநாதபுரம் மருத்துவமனை
/
நோய் பரப்பும் மையமாக ராமநாதபுரம் மருத்துவமனை
ADDED : பிப் 21, 2025 06:51 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நோய்பரப்பும் மையமாக மாறி வருகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 700க்கும் மேற்பட்டஉள் நோயாளிகள் உள்ளனர். இவர்களை பார்ப்பதற்காக தினமும் உறவினர்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையின் பழைய புற நோயாளிகள் பிரிவில் கட்டடத்தின் முன் பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோயாளிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் நோய் பரப்பும் நிலையமாக மாறி வருகிறது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இது போன்று கழிவு நீர் தேங்குவதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.