/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது
/
ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது
ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது
ராமநாதபுரம் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தேசிய விருது
ADDED : செப் 28, 2024 02:41 AM

ராமநாதபுரம்:தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கையெறிபந்து, அமர்ந்து விளையாடும் கைப்பந்து போட்டியில் பங்கேற்ற ராமநாதபுரம் மு.சர்மிளாவுக்கு 29, சிறந்த வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாரத் குக்கிங் கோல் லிமிடெட் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான கையெறி பந்து, அமர்ந்து விளையாடும் கைப்பந்து போட்டிகள் நடந்தன. கெலிகான் இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, ஜார்கண்ட், உத்திரகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
தமிழக அணியில் 7 பேர் பங்கேற்றனர். அதில் ராமநாதபுரம் பாரதிநகர் மு.சர்மிளா சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவர் கம்போடியாவில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
சர்மிளா கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளாலும் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்க முடியும். ராஞ்சியில் நடந்த தேசிய போட்டியில் சிறந்த வீராங்கனையாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. கணவர் விக்னேஸ்வரன், தந்தை முனியசாமி, தாய் சத்யா ஆகியோர் எனக்கு உறுதுணையாக உள்ளனர் என்றார்.