/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு ஊழியர்கள் சிரமம்! கூடுதல் ரயில்வே டிராக்குகள் இல்லாததால் தவிப்பு

ADDED : மார் 28, 2024 10:52 PM
மதுரை தவிர்த்து அருகில் உள்ள நகரங்களில் கூடுதல் ரயில்வேடிராக்குகள் இல்லாத நிலையில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியவில்லை. பராமரிப்பு பணிகளுக்காக ரயில்களை திருச்சி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.
மதுரையை அடுத்த விருதுநகர், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கூடுதல் ரயில்வே டிராக்குகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் வெகு துாரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்களை ஊழியர்கள் சுத்தம் செய்து பராமரிப்பு பணி செய்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது.
ராமநாதபுரத்தில் பயணிகள் ரயிலுக்காக இரு ரயில்வே டிராக்குகளும், சரக்கு ரயிலுக்காக ஒரு டிராக்கும் உள்ளது. இதில் ஒரு டிராக்கில் வரும் ரயில்களை நிறுத்தவும், மற்றொரு டிராக்கில் செல்லும் ரயில்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஏதாவது ஒரு ரயிலை டிராக்கில் நிறுத்தினால் மற்றொரு டிராக்கில் மட்டுமே ராமநாதபுரம் வரும் ரயிலையும், செல்லும் ரயிலையும் பயன்படுத்துவதால் நெருக்கடி ஏற்படுகிறது.ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர் மாதவன் கூறியதாவது:
ராமநாதபுரம் ரயில் நிலையில் கூடுதலாக இரு டிராக்குகள் அமைக்கப்பட வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் சூறாவளிக்காற்றால் செல்ல முடியாத நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது.
ரயில் பெட்டிகளை சுத்தம் செய்து பராமரிப்பு செய்ய திருச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தென் பகுதிகளில் விருதுநகர், காரைக்குடி, ராமநாதபுரத்தில் கூடுதல் டிராக்குகள் இல்லாத நிலை உள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் இது போன்ற அருகில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில்வே டிராக்குகள் அமைக்க வேண்டும் என்றார்.