/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய, மாநில விளையாட்டு போட்டி ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
/
தேசிய, மாநில விளையாட்டு போட்டி ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
தேசிய, மாநில விளையாட்டு போட்டி ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
தேசிய, மாநில விளையாட்டு போட்டி ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை
ADDED : அக் 14, 2025 03:53 AM

ராமநாதபுரம்: முதல்வர் கோப்பைக்கான மாநில தடகள போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு சி.ஐ.எஸ்.சி.இ., போட்டியில் ராமநாதபுரம் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
முதல்வர் கோப்பைக்கான 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான தடகளப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஆர்., கீர்த்திகா பளு துாக்குதல் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம், பரமக்குடி எஸ்.என்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி என்.எஸ்.வைஷ்ணவி பளு துாக்குதலில் 2ம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். சவுராஷ்ரா மேல் நிலைப்பள்ளி மாணவர் கூ.பா.ேஹமநாதன் பளு துாக்கும் போட்டியில் வெண்கலம் வென்றார்.
கல்லுாரி மாணவர்களுக்கான தடகளப்போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி மாணவி வி. மதுமிதா குண்டு எறிதலில் வெள்ளி பதக்கம், பரமக்குடி அரசு கலைக்கல்லுாரி மாணவி செ. செனிலியா 400 மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
* தேசிய அளவிலான சி.ஐ.எஸ்.சி.இ., விளையாட்டு போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பங்கேற்ற நேஷனல் அகாடமி ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான வில்வித்தையில் ஸ்ரீசரண் தங்கப்பதக்கம், மல்லீஷ்கா வெண்கலம் வென்றனர்.
டேக்வாண்டோவில் மெர்வின் தேவ் பிரிட்டோ, வன்ஷிகா வெண்கலப் பதக்கம், குத்துச்சண்டையில் பிரத்துஷ் ரக்க்ஷன் வெள்ளி வென்றார். கேரம் போட்டியில் சாமுவேல் லசாரஸ், கிப்சன் டேனியல் வெள்ளி பதக்கம், விஸ்வா வெண்கலம் பதக்கம் வென்றனர்.
இந்த மாணவர்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) புகாரி, விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் தினேஷ்குமார், நேஷனல் அகடாமி ஐ.சி.எஸ்.இ., முதல்வர் ஜெயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் ஜோஸ்வா உட்பட பலர் உடனிருந்தனர்.