ADDED : அக் 14, 2025 03:53 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கேணிக்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அம்மா பூங்கா அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் பகுதியை சேர்ந்த இருளான் மகன் சுரேஷ் 26, குளத்துாரை சேர்ந்த 18 வயது வாலிபர் எனத் தெரிய வந்தது.
அவர்களை சோதனை செய்த போது தலா 5 கிராம் கொண்ட 40 கஞ்சா பாக்கெட்கள் இருப்பது தெரிய வந்தது.
200 கிராம் கஞ்சாவை இருவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் சுரேஷ் மீது பஜார் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை எம்.ஜி.ஆர்., நகர் விஷால் 20. இவர் நாட்டரசன்கோட்டை விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்தார். அங்கு சென்ற எஸ்.ஐ., மணிகண்டன் அவரிடம் சோதனை செய்ததில், 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தார்.