/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அறிவியல் மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
/
மாநில அறிவியல் மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
மாநில அறிவியல் மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
மாநில அறிவியல் மாநாட்டிற்கு ராமநாதபுரம் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு
ADDED : பிப் 05, 2025 05:00 AM
ராமநாதபுரம்: குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டிற்கு ராமநாதபுரம் பள்ளி மாணவர்களின் நான்கு ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகள் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்க குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள் தென்காசியில் தனியார் கல்லுாரியில் நடைபெற்ற தென் மண்டல அளவில் குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தெருக்களில் தேங்கும் மழைநீரை பயன்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், சுத்தமில்லாத குடிநீரால் ஏற்படும் நோய்கள், நீர்மாசு தடுப்பு முறைகள், கடல்நீர் மாசு தடுப்பு, பாதுகாப்பு குறித்த நான்கு ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஜூனியர் தமிழ் பிரிவில் பார்த்திபனுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகில், குணா, ஆர்.எஸ்.மங்கலம் அளிந்திகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தர்ஷன், தேவதர்ஷன் ஆங்கிலப்பிரிவில் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் கவினேஷ், பவுசூர் ரகுமான், சீனியர் ஆங்கிலப்பிரில் ராமநாதபுரம் நபிசாம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விகாஷ், முனிஸ்குமார் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் புதுக்கோட்டையில் பிப்., 15, 16 தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள், அவர்களுக்கு வழிகாட்டிய அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரோம், தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் லியோன், செயலாளர் காந்தி, கல்வி ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் ஆகியோரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.