/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்
/
பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்
பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்
பிலிப்பைன்ஸ் காதலியை கரம்பிடித்த ராமநாதபுரம் இளைஞர்
ADDED : அக் 25, 2025 08:13 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
ராமநாதபுரம், ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் தீபன் குமார், 30. இவர், கத்தார் நாட்டில் உள்ள நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
அதே அலுவலகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அர்ஷா, 28, என்ற பெண்ணும் பணி புரிகிறார்.
இருவரும் ஐந்தாண்டுகளாக காதலித்தனர். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ஹிந்து முறைப்படி வேத மந்திரம் முழங்க ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இருவர்களுக்கு திருமணமும் நடந்தது.
காதலித்த வாலிபரை கடல் கடந்து வந்து திருமணம் செய்த பிலிப்பைன்ஸ் பெண்ணை உறவினர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.