/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமானுஜாச்சாரியார் மங்களாசாசனம்
/
ராமானுஜாச்சாரியார் மங்களாசாசனம்
ADDED : நவ 21, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் நேற்று காலை 9:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் கந்தாடை அப்பன் ராமானுஜாச்சாரியார் சுவாமி மங்களாசாசனம் நிகழ்ச்சி நடந்தது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார் உள்ளிட்ட ஐந்து சன்னதிகளிலும் ராமானுஜாச்சாரியார் சுவாமி தரிசனம் செய்தார். மேளதாளங்கள் முழங்க அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இவரை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சீடர்கள் பங்கேற்று ஆசி பெற்றுச் சென்றனர்.

