/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் சிக்கிய இலங்கை மீனவர்கள் கலெக்டர் முன் ஆஜர்
/
ராமேஸ்வரத்தில் சிக்கிய இலங்கை மீனவர்கள் கலெக்டர் முன் ஆஜர்
ராமேஸ்வரத்தில் சிக்கிய இலங்கை மீனவர்கள் கலெக்டர் முன் ஆஜர்
ராமேஸ்வரத்தில் சிக்கிய இலங்கை மீனவர்கள் கலெக்டர் முன் ஆஜர்
ADDED : நவ 21, 2025 01:40 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்கள் இருவர் அவர்கள் நாட்டிற்கு செல்ல அனுமதிப்பது தொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை புத்தளம் அருகே கல்பட்டியா கடற்கரையில் இருந்து ஜெயரூபன் 42, தினேஷ்சுரங்கா 40, ஆகியோர் செப்.,17ல் பைபர் கிளாஸ் படகில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய -இலங்கை எல்லையில் மீன் பிடித்த போது திடீரென இன்ஜின் பழுதாகி படகை இயக்க முடியாமல் போனது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.
செப்., 18ல் தனுஷ்கோடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கியூ பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து அவர்களுடன் கடத்தல்காரர்கள் தனுஷ்கோடிக்குள் ஊடுருவினரா என விசாரித்தனர். இருவர் மீதும் எல்லை தாண்டியதாக வழக்குப்பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இலங்கை மீனவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதற்கு அனுமதி கேட்டனர்.
இதற்காக நேற்று ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரது ஜி.பி.எஸ்., கருவியை ஆய்வு செய்து யதார்த்தமாக வந்தார்களா, அடிக்கடி வந்து செல்வார்களா என்பது குறித்து உறுதி செய்த பின் இலங்கைக்கு அனுப்புவது குறித்து பரிசீலனை செய்யலாம் என கலெக்டர் கூறினார். அதையடுத்து இருவரையும் மீண்டும் புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

