/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம்--கன்னியாகுமரி அரசு பஸ் இயக்க வேண்டும்: திசையன்விளைக்கும் இரவு நேரம் கூடுதல் பஸ் தேவை

ADDED : ஜன 20, 2024 04:25 AM
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், துாத்துக்குடி, திருச்செந்துார், திசையன்விளை வரை இரவு நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் போன்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு அரசு பஸ்கள் அதிகளவில் இல்லை.
அப்படியே பஸ்கள் இயக்கப்பட்டாலும் துாத்துக்குடி, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழகங்கள் மட்டுமே பஸ்களை இயக்கி வருகின்றன. ராமநாதபுரத்தில் இருந்து விளாத்திகுளம், கோவில்பட்டி வழியாக ஒரு பஸ்சும், துாத்துக்குடி வழியாக திருநெல்வேலிக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
துாத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கும், திருநெல்வேலியில் இருந்து வேளாங்கண்ணி திசையன்விளை, நாகர்கோவில், களியக்காவிளை பகுதிக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.
அதே போல் இரவு 11:00 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து திசையன்விளை செல்லும் பஸ்சில் எந்த நாளும் கூட்டம் அதிகமாக உள்ளதால் ராமநாதபுரத்தில் இருந்து செல்வோர் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அதன் பின் இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படாததே இதற்கு காரணம்.
மக்களிடையே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திசையன்விளை, கன்னியாகுமாரிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.