/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் ராமேஸ்வரம் குளியல் அறைக்கு 'சீல்'
/
ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் ராமேஸ்வரம் குளியல் அறைக்கு 'சீல்'
ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் ராமேஸ்வரம் குளியல் அறைக்கு 'சீல்'
ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் ராமேஸ்வரம் குளியல் அறைக்கு 'சீல்'
ADDED : ஜன 01, 2025 10:16 PM

ராமேஸ்வரம்:ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள குளியல் அறை, உடைமாற்றும் அறைகளுக்கு வருவாய்த்துறையினர் 'சீல்' வைத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரை அருகே தனியாருக்கு சொந்தமான பெண் பக்தர்கள் குளித்து உடை மாற்றும் அறை உள்ளது. டிச.23ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெண்கள் சிலர் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு இந்த அறைக்கு உடைமாற்றச் சென்றனர். அறைக்குள் ரகசிய கேமரா பொருத்தி இருந்ததை கண்டுபிடித்து போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து, இந்த அறையை நிர்வகித்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் மீரான் மைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷ் கண்ணனின் மொபல் போனில் பெண்கள் உடை மாற்றும் 120 வீடியோக்கள் இருந்தன.
விசாரணை நடத்திய ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், உடைமாற்றும் அறையை சீல் வைக்க உத்தரவிட்டார். ராமேஸ்வரம் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ரொட்ரிக்கோ ஆகியோர் குளியல் அறை, உடை மாற்றும் அறைகளை பூட்டி சீல் வைத்தனர்.