/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு
/
ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் டூவீலர்களால் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 15, 2024 05:05 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்துள்ளதால் பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, திருச்செந்துார், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. இதனால் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்நிலையில் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள வணிகக் கடைகள், அம்மா உணவகம் முன்பு தினமும் நுாறுக்கு மேற்பட்ட டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து விடுகின்றனர்.
இதனால் பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் அரசு, தனியார் சுற்றுலாப் பஸ்கள் சென்று திருப்ப முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் அம்மா உணவகத்திற்குள் சாப்பிட செல்லும் மக்கள், டூவீலர் ஆக்கிரமிப்பால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நகராட்சி டூவீலர் ஸ்டாண்டை விரிவுபடுத்தி அங்கு நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

