/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி கடலில் சி.ஐ.டி.யு., போராட்டம்
/
ராமேஸ்வரம் அக்னி கடலில் சி.ஐ.டி.யு., போராட்டம்
ADDED : பிப் 24, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம், : புதுடில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
டில்லியில் போராட்டம் செய்யும் விவசாயிகள் மீது மத்திய அரசு துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி விரட்டியடிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சி.ஐ.டி.யு., கடல் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் கருணாமூர்த்தி, சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.