/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
/
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
ADDED : அக் 10, 2025 09:23 PM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி இன்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தலைவர் சேசு தலைமையில் நடந்தது.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும், 4 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று ராமேஸ்வரம் மீன்துறை டோக்கன் வழங்கும் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது, இதனைத்தொடர்ந்து 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்தனர்.
மேலும் அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருத்திய காரைக்கால் விசைப்படகுகளில் மீனவர்கள் வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் பல நாட்கள் தங்கி மீன்பிடிப்பதால் மீன்வளம் அழிகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கைதாகி பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 8 படகுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இப்படகுகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தினர்.