/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதுப்பிக்க தோண்டிய ராமேஸ்வரம் கோயில் சாலை 21 நாட்களாக கிடப்பில் உள்ளது

ADDED : நவ 07, 2025 11:17 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் புதுப்பிக்க தோண்டிய கோயில் சாலையை 21 நாட்களாக சீரமைக்காமல் கிடப்பில் உள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் ரதவீதியில் மழைநீர் கோயிலுக்குள் புகுந்து குளம் போல் தேங்குகிறது. இதனை தடுக்க கோயில் கிழக்கு நுழைவு வாசல் எதிரே அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் சாலையின் உயரத்தை குறைத்து புதிய சிமென்ட் சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதற்காக 21 நாட்களுக்கு முன்பு மண் அள்ளும் இயந்திரம் மூலம் 300 அடி நீளமுள்ள பேவர் பிளாக் சாலையை முழுவதுமாக அகற்றினர்.
இதனால் அக்னி தீர்த்த சாலையில் 2 அடியில் பள்ளம் ஏற்பட்டு தாறுமாறாக கற்கள் சிதைந்து கிடக்கிறது.
மேலும் பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து இச்சாலையில் திடக்கழிவு நீர் திறந்த வெளியில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நீராடி விட்டு இதன் வழியாக வரும் பக்தர்கள், பள்ளம் மற்றும் கற்களில் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். புதுப்பிக்க தோண்டிய சாலையை 21 நாட்கள் ஆகியும் சரி செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டதால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பக்தர்கள் நலன் கருதி தோண்டிய சாலையை விரைவில் புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.