/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
அடங்கல் கிடைக்காததால் பயிர்காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : நவ 07, 2025 11:17 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்லுார் பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு அடங்கல் கிடைக்காததால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமத்தில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.
நடப்பாண்டிற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்களிடம் அடங்கல் சான்று பெற விவசாயிகள் தினந் தோறும் வி.ஏ.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகத்திற்கு சென்று அடங்கல் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட செல்லுார், முத்துராமலிங்கபுரம் பட்டி கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., இதுவரை அடங்கல் வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
தினந்தோறும் விவசாயப் பணியை விட்டுவிட்டு அடங்கல் பெறுவதற்காக அலுவலகங்களில் காத்திருக்கின்றனர்.
நவ.,15 பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடைய இன்னும் சில நாட்கள் இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
செல்லுார் பகுதியில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு செய்வதற்கு தேவையான அடங்கல் வி.ஏ.ஓ., விரைவில் வழங்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

