தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அக்., 21 ல் ராமேஸ்வரம் கோயில் நடையடைப்பு

அக்., 21 ல் ராமேஸ்வரம் கோயில் நடையடைப்பு

அக்., 21 ல் ராமேஸ்வரம் கோயில் நடையடைப்பு


UPDATED : அக் 13, 2026 06:17 PM

ADDED : அக் 13, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:17 PM ADDED : அக் 13, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:

அக்.,21ல் விஜயதசமியன்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

அக்.,11ல் இக்கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடந்து வரும் நிலையில் 11ம் நாள் திருவிழாவான அக்., 21ல் அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5:00 முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்கம் பூஜை நடக்கும். இதனைத் தொடர்ந்து கால பூஜை, சாயரட்ச பூஜைகள் நடக்கும். பின் வழக்கம் போல் மதியம் 1:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மதியம் 3:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பின் மாலை 4:00 மணிக்கு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி மகரநோன்பு திடலில் எழுந்தருளி அம்பு எய்து அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். பின் இரவு 8:00 மணிக்கு கோயிலுக்கு அம்மன் திரும்புவார். இதனால் மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும்.

இரவு 8:05 மணிக்கு கோயில் நடை திறந்ததும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8:30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என இணை ஆணையர் சுரேஷ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us