/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநிலத்தில் 3ல் இருந்தது 24வது ரேங்க் பெற்று பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி
/
மாநிலத்தில் 3ல் இருந்தது 24வது ரேங்க் பெற்று பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி
மாநிலத்தில் 3ல் இருந்தது 24வது ரேங்க் பெற்று பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி
மாநிலத்தில் 3ல் இருந்தது 24வது ரேங்க் பெற்று பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி
UPDATED : மே 17, 2025 04:17 AM
ADDED : மே 17, 2025 12:52 AM

தமிழகத்தில் நேற்று (மே 10) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024--25 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 16,057 பேர் எழுதினர். இதில், மாணவர்கள் 7202, மாணவிகள் 7851 என 15,053பேர் தேர்ச்சி அடைந்து 93.75 சதவீதம் பெற்று மாநில அளவில் 24ம் இடம் பெற்றுள்ளனர்.
2024-25 கல்வி ஆண்டில் 260 பள்ளிகளில் 138 அரசு பள்ளிகளில் 47ம், 47அரசு உதவிபெறும் பள்ளிகள் 6ம், 75 தனியார் பள்ளிகளில் 45 என 98 பள்ளிகள் நுாறு சதவீதம்தேர்ச்சி பெற்றுள்ளனர். 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது, 497 மதிப்பெண்களை எடுத்து 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
பின்னடைவு
கடந்த 10 ஆண்டுகளில் இந்த அளவிற்கு தேர்ச்சி சதவீதம் மாநில அளவில் பின்தங்கியது இல்லை. சிறந்த தேர்ச்சியாக 2019ல் மாநிலத்தில் 2வது இடமும், 2024ல் மாநில அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர். அந்த ஆண்டை விட தற்போது 2025ல் இருமடங்கு (24வது இடம்) ராமநாதபுரம் மாநில அளவில் கல்வியில் பின்தங்கியுள்ளது.
இதற்கான காரணத்தை கண்டறிந்து வரும் கல்வி ஆண்டிலாவது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம், கல்வித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 47 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 500க்கு 495, 492 மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்துஉள்ளனர்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் கணக்கு பாடத்தில்மாணவர்கள் தேர்ச்சி குறைவால் நுாறு சதவீதம் தேர்ச்சி பள்ளி எண்ணிக்கை குறைள்ளது. இதற்கான காரணம் குறித்தும், வரும் கல்விஆண்டில் தேர்ச்சியை அதிகரிக்க பள்ளி தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்றார்.