UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 04:25 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை வழிபாட்டு குழுவினரின் வைரவிழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் நடக்கிறது.
நவ.12 இரவு 6:00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கி 8:00 மணி வரை நடக்கிறது. மறுநாள் காலை 8:00 மணிக்கு கோ பூஜையும், 2ம் கால பூஜை, 9:00 மணிக்கு பிரதோஷ வீதியில் புதிதாக அமைக்கபட்ட ரதம் வெள்ளோட்டம் நடைபெறும். இது குறித்து கார்த்திகை வழிபாட்டு குழுவினர் கூறியதாவது– இந்த ஆன்மிக விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். மாதந்தோறும் கார்த்திகை அன்று ரதம் ஊர்வலம் கோயில் பிரகாரத்தில் நடைபெறும் என்றனர்.
