நெல்பயிரில் ஆனைக் கொம்பன் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
நெல்பயிரில் ஆனைக் கொம்பன் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த அறிவுறுத்தல்
UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 04:37 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம், கற்காத்தகுடி, சுற்றுவட்டார கிராமங்களில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில், ஆனைக் கொம்பன் பூச்சி நோய் தாக்குதலால் நெல் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களின் குருத்துப் பகுதி வெங்காயத்தாள் போன்று மாற்றம் அடைந்து காணப்படும். இந்நோயை, ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த பிப்ரோனிஸ் மருந்தை ஏக்கருக்கு 4 கிலோ அளவில் மணலில் கலந்து இடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியும். மேலும், அதிக தழைச்சத்து அளிக்கக்கூடிய யூரியா போன்ற ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என, வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். கற்காத்தகுடி பகுதியில், நோய் பாதிக்கப்பட்ட பயிர்களை, ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விஜயகுமார், துணை இயக்குநர் மாநிலத் திட்டம் அமர்லால், துணை இயக்குநர் மத்திய திட்டம் ராஜா, வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு தினேஷ் குமார் பங்கேற்றனர்.
