/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
/
வாகனத்தில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஏப் 11, 2025 04:45 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பதுக்கி வைத்து சரக்கு வாகனத்தில் வெளியூருக்கு கடத்தி செல்லும் போது 400 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் வட்ட வழங்கல் தாசில்தார் பழனிக்குமார் தலைமையிலான வருவாய்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வசந்த நகரில் நின்றிருந்த சரக்கு வாகனத்தில் அரிசி மூடைகளை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதனை நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் ஒப்படைத்தனர்.
தாசில்தார் பழனிக்குமார் கூறுகையில், வாடகை வாகனத்தில் ரேஷன் அரிசியை வெளியூருக்கு கொண்டு செல்ல இருந்தனர். அப்போது 9 மூடைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தோம். பதுக்கி வைத்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர் என்றார்.