/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ரேஷன் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடியில் ரேஷன் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 06:46 AM

பரமக்குடி: பரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மற்றும் மாநில துணைத்தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். மாநில செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
பொது விநியோகத்திற்காக தனித்துறை வேண்டும். ரேஷன் கடைகளில் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும்.
ரேஷன் கடைகளில் உள்ள எடைத்தராசு கணினியுடன் இணைத்து ரசீது வழங்கும் திட்டத்துடன் விற்பனை முனையத்துடனும் இணைக்க வேண்டும்.
பொருட்களின் எடையில் வித்தியாசம் வரும் என நினைத்தால் அரசே ஒவ்வொரு பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

