/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பணியாளர்கள் ஏப்.22 - 24 வரை தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் ஏப்.22 - 24 வரை தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்
ரேஷன் பணியாளர்கள் ஏப்.22 - 24 வரை தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்
ரேஷன் பணியாளர்கள் ஏப்.22 - 24 வரை தொடர் வேலை நிறுத்தப்போராட்டம்
ADDED : ஏப் 16, 2025 01:49 AM
ராமநாதபுரம்:தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்., 22 முதல் 24 வரை தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் தினகரன், செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கூறியதாவது:
பொது விநியோகத்திட்டத்தில் மக்களுக்கு சரியான எடையில் உணவுப்பொருள்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய எடை தராசு கருவிகளை விற்பனை முனைய கருவியுடன் இணைத்து உருவாக்குவதற்கான பணிகள் நடக்கிறது. அதே நேரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கும் போது சரியான எடையில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. சரியான எடையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என சங்கம் பல போராட்டங்களை நடத்தியும் மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.
நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் போது சரியான எடையில் வழங்குவதை உறுதி செய்ய கிடங்குகளில் இருக்கக்கூடிய எடை தராசுகளையும் அங்குள்ள கம்ப்யூட்டரையும் இணைத்து எந்த எடையில் உணவுப்பொருட்கள் கடைகளுக்கு செல்கிறது என்பதை கம்ப்யூட்டர் மூலம் பிரின்ட் செய்ய வேண்டும். அதனடிப்படையில் உணவுப்பொருட்களை ரேஷன் கடைகளுக்கு வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும்.
ரேஷன் விநியோகத்திற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும். சரியான எடையில் பொட்டலங்களாக உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.,22 முதல் 24 வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்., 22ல் வட்டாரம், ஏப்., 23ல் கோட்டம், ஏப்., 24ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்தம் நடக்கிறது என்றனர்.