/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீண்டும் முளைக்கும் நெற்பயிர்கள்
/
மீண்டும் முளைக்கும் நெற்பயிர்கள்
ADDED : ஜன 26, 2025 07:02 AM

கமுதி: கமுதி அருகே கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட பசும்பொன், பேரையூர், கோவிலாங்குளம், புதுக்கோட்டை, பெருநாழி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிராக நெல் பயிரிட்டு விவசாயம் செய்தனர்.
பருவமழை பொய்ப்பால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பின் பருவம்தவறி பெய்த மழையில் நெற்பயிர்கள் நன்கு முளைக்க தொடங்கியது. இன்னும் ஒரு சில நாட்களில் நெற்பயிர்கள் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்த போது கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து வீணாகியது.
கமுதி அருகே கோவிலாங்குளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மீண்டும் நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கமுதி சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

