/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்
/
நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதல்
ADDED : டிச 04, 2024 04:47 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெற்பயிரில் செந்தாழை நோய் தாக்குதலால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். நெற்பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளதுடன் சில பகுதிகளில் மகசூல் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான நெல் வயல்களில் பயிர்கள் பசுமையாக இருக்க வேண்டிய நிலையில் செந்தாழை நோய் தாக்குதலால் தோகைகள் பழுப்பு நிறமாகவும், பயிர் முழுவதும் வெண்மை நிற புள்ளிகள் ஏற்பட்டு வளர்ச்சி குன்றி வருகிறது.
மகசூல் கொடுக்க வேண்டிய வளர்ச்சி நிலையில் இந்த நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தினர்.