ADDED : அக் 23, 2025 04:31 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார அளவிலான கலைத் திருவிழா நடந்தது. கீரனுார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சுதாமதி, முருகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் ராமர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேஸ்வரி வரவேற்றார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி 122 பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். நடனம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் வயதின் அடிப்படையில் நடந்தது.
முதல் இடத்தை பிடிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், கணினி விவரப் பதிவாளர், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வாளர்கள் உட்பட சிறப்பாசிரியர்கள் பலர் செய்தனர்.