ADDED : ஆக 06, 2025 05:42 AM
கமுதி : கமுதியில் முசாபர் அவுலியா தர்ஹா பிரசித்தி பெற்ற தர்ஹா. இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடக்கிறது. கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
சுந்தராபுரம் பகுதியில் உள்ள தைக்கா வீட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. அப்போது தைக்கா வீட்டில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தனம் நிறைந்த குடத்தை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய கூடுக்குள் வைத்து ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி துவக்கி வைத்தார்.
பின்பு சுந்தராபுரத்தில் இருந்து கமுதி அதனை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தர்ஹா வந்தடைந்தது. அப்போது வழிநெடுங்கிலும் ஏராளமானோர் மல்லிகை பூக்களை சந்தனக்கூடு மீது வைத்து வழிபட்டனர். ஹிந்து முஸ்லிம் கலந்து கொண்டதால் மத நல்லிணக்க விழாவாக அமைந்தது. கமுதி சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.