/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் கடலில் இரும்பு உருளைகள் அகற்றம்
/
பாம்பன் கடலில் இரும்பு உருளைகள் அகற்றம்
ADDED : நவ 03, 2024 03:14 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலம் அமைப்பதற்காக கடலில் ஊன்றப்பட்ட இரும்பு உருளைகளை ரயில்வே ஊழியர்கள் அகற்றியதால் படகுகள் பாலத்தை கடப்பதற்கான கிரீன் சிக்னல் கிடைத்தது.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் இப்பாலத்தின் நடுவில் துாக்கு பாலம் பொருத்த கடலில் 18 இரும்பு உருளைகளை ஊன்றினர். இந்த உருளைகள் மீது துாக்கு பாலத்தை வைத்து பாலத்துடன் பொருத்தினர். இந்த உருளைகளால் பாலத்தை படகுகள் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரயில்வே நிர்வாகம் படகுகள் கடப்பதற்கு தடை விதித்தது.
இந்நிலையில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிந்து நவ., 20க்குள் பாம்பன் பாலம் திறப்பு விழா நடக்க உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக கடலில் ஊன்றிய இரும்பு உருளைகளை ராட்சத மிதவை கிரேன் மூலம் ரயில்வே ஊழியர்கள் அகற்றி வந்த நிலையில், இன்றுடன் (நவ., 3) உருளைகளை அகற்றும் பணி நிறைவடைகிறது. இதற்காக காலை 10:00 முதல் மாலை 6:00 வரை துாக்கு பாலத்தை திறந்த நிலையில் வைத்திருந்தனர்.