/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையோரம் முட்செடிகள் அகற்றம்
/
கிழக்கு கடற்கரை சாலையோரம் முட்செடிகள் அகற்றம்
ADDED : டிச 28, 2024 07:51 AM
கீழக்கரை : -கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சாலையின் இருபுறங்களில் வளர்ந்து இருந்த முட்செடிகள் அகற்றும் பணி நடக்கிறது.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை கிழக்கு கடற்கரைச் சாலை 18 கி.மீ., தொலைவில் உள்ளது. துாத்துக்குடி முதல் கீழக்கரை வழியாக ராமநாதபுரம், தேவிபட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை 2010ல் அமைக்கப்பட்டது.
இருவழிச்சாலையாக உள்ள இப்பகுதியில் சீமை கருவேல மரங்கள் மற்றும் சேதமடைந்த சாலையால் அடிக்கடி விபத்து நிகழ்வதால் அப்பகுதிகளில் கடந்த 2021ல் புதியதாக சிறு பாலங்கள், சாலை அகலப்படுத்துதலும் நடந்தது. இந்நிலையில் 18 கி.மீ., தொலைவிற்கு சாலையில் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மூலம் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு சிரமத்தை சந்தித்து வந்தனர். இது குறித்து டிச., 25ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறங்களிலும் மற்றும் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த முட்செடிகளை இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.