தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மின்கம்பத்தில் படரும் செடிகளை அகற்றுங்கள்

மின்கம்பத்தில் படரும் செடிகளை அகற்றுங்கள்

மின்கம்பத்தில் படரும் செடிகளை அகற்றுங்கள்


UPDATED : நவ 20, 2026 05:04 PM

ADDED : நவ 20, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 05:04 PM ADDED : நவ 20, 2026 05:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: டவுன் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு ரோட்டோரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்சாரம் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது, மழைக்காலம் என்பதால் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அதிகளவில் வளர்ந்து மின் கம்பங்கள் மீது படர்ந்து மின் கம்பிகள் வரை பரவி உள்ளன.

இதனால், லேசான காற்று அடித்தாலே கிராமங்களில் மின்தடை ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகுதிக்கு செல்லும் மின் கம்பங்களில் செடி கொடிகள் படர்ந்துள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us