/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சியில் அம்மன் கோயில் ஊருணி சீரமைப்பு: மக்கள் மகிழ்ச்சி
/
பரமக்குடி நகராட்சியில் அம்மன் கோயில் ஊருணி சீரமைப்பு: மக்கள் மகிழ்ச்சி
பரமக்குடி நகராட்சியில் அம்மன் கோயில் ஊருணி சீரமைப்பு: மக்கள் மகிழ்ச்சி
பரமக்குடி நகராட்சியில் அம்மன் கோயில் ஊருணி சீரமைப்பு: மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2025 02:36 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் கோயில் ஊருணி சீரமைக்கப்பட்ட நிலையில் மக்கள் பயன்பாட்டில் உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளைக் கொண்டுள்ளது. வைகை ஆற்றின் இரு கரைகளையும் பிரதானமாகக் கொண்டு பரமக்குடி, எமனேஸ்வரம் என உள்ளது.மக்களின் தண்ணீர் தேவைக்கு வைகை ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் எமனேஸ்வரத்தில் உள்ள ஏராளமான ஊருணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
இது குறித்து பொதுமக்களுடன் தினமலர் நாளிதழ் அடிக்கடி சுட்டிக் காட்டியது.
இதன் தொடர்ச்சியாக எமனேஸ்வரம், இளையான்குடி ரோட்டோரம் உள்ள உய்ய வந்தாள் அம்மன் கோயில் ஊருணி கடந்த மாதங்களில் நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டது.
இதனால் அப்பகுதி நீரூற்று அதிகரித்துள்ள நிலையில் கோடை காலத்திலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. தொடர்ந்து மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள முருகன் கோயில் ஊருணி, கிறிஸ்தவ தெரு ஊருணி சீரமைக்கப்பட்டது.
இவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள விநாயகர் கோயில் ஊருணி உள்ளிட்டவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.