/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரியபட்டினம் டூ கீழக்கரைக்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
/
பெரியபட்டினம் டூ கீழக்கரைக்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
பெரியபட்டினம் டூ கீழக்கரைக்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
பெரியபட்டினம் டூ கீழக்கரைக்கு கூடுதலாக பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 03:27 AM
கீழக்கரை: -கீழக்கரையில் இருந்து திருப்புல்லாணி வழியாக பெரியபட்டினம் செல்லக்கூடிய அரசு டவுன் பஸ் ஒரு வழித்தடத்தில் மட்டுமே இயக்கப்படுவதால் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
கீழக்கரை தாலுகா அலுவலகம் 2015ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 26 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாக இருப்பதால் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கீழக் கரையில் இருந்து பெரியபட்டினம் செல்லக்கூடிய சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வழித்தடம் எண் 18 அரசு டவுன் பஸ் பெரியபட்டினத்தில் இருந்து மதியம் 1:00 மணிக்கு பிறகு இயக்கப்படுகிறது.
பெரியபட்டினம், ரெகுநாதபுரம், நைனாமரைக்கான், பத்திராதரவை, வண்ணாங்குண்டு, தினைக்குளம், திருப் புல்லாணி மார்க்கமாக கீழக்கரைக்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானோர் கீழக்கரையில் இருந்து ராமநாத புரம் வந்து ராமநாதபுரத்தில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள பெரியபட்டினத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
எனவே கும்ப கோணம் கோட்ட போக்குவரத்து கழகத்தினர் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.