/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துதர கோரிக்கை

ADDED : ஆக 27, 2025 12:30 AM
ராமநாதபுரம்; ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் 108 வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராதானுார் ஊராட்சி மேடாகோட்டை கிராமத்தை சேர்ந்த குமரேன் பொதுமக்கள் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதில், ஆனந்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்து, பாம்பு கடி போன்ற அவசர சிகிச்சைகளுக்கு ஆனந்துாரில் இருந்து 25 கி.மீ.,ல் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை அரசு மருத்துவமனைகளில் இருந்து ஆம்புலன்ஸ் 108 வரவழைக்கப்படுகிறது.
இதனால் பிரசவம் மற்றும் விபத்து அவசர சிகிச்சை உரிய நேரத்தில் பெற முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஆனந்துாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தரமாக ஆம்புலன்ஸ் 108 வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தினர்.