/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் மக்களை சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 02, 2025 10:29 PM

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களை சிறப்பு தரிசன வழியில் பாரம்பரிய முறைப்படி அனுமதிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில், ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரிய வழிபாட்டு முறையில் பல ஆண்டுகளாக சிறப்பு தரிசன வழியாக உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது வந்துள்ள அதிகாரிகள் அவ்வாறு இல்லாமல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே ராமேஸ்வரம் உள்ளூர் பக்தர்களை பாரம்பரிய முறைப்படி சிறப்பு தரிசன வழியில் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே போன்று ஹிந்துபாரத முன்னணி சார்பில் மனு அளித்தனர். அதில் கோயில் பிரகாரத்தை சுற்றி இரும்பு வேலி அமைத்து உள்ளூர், வெளியூர் பக்தர்களை நிம்மதியாக தரிசனம் செய்யவிடாமல் கோயில் நிர்வாகம் செயல்படுகிறது. இரும்பு வேலியை அகற்ற வேண்டும்.
உள்ளூர் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.