/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலட்டாறு பகுதியில் சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை
/
மலட்டாறு பகுதியில் சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை
ADDED : ஜன 16, 2025 04:51 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே மலட்டாறு மும்முனை சந்திப்பில் சுகாதார வளாக கட்ட பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
சாயல்குடி, முதுகுளத்துார், கடலாடி, ஒப்பிலான், மாரியூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலையாகும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான கழிப்பறை வசதி இப்பகுதியில் இல்லாத நிலை உள்ளது.
மலட்டாறு பகுதியில் இரு இடங்களில் பயணியர் நிழற்குடை உள்ளது. அவற்றை பயன்படுத்துவதற்கு பஸ் பயணிகள் தயங்கி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அப்பகுதியில் சுகாதார வளாகங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணியர் நிழற்குடை கட்டும் ஆர்வத்தை அத்தியாவசிய தேவையான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த கடலாடி யூனியன் நிர்வாகம் முன்வர வேண்டும்.

