/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
/
உத்தரகோசமங்கை ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
உத்தரகோசமங்கை ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
உத்தரகோசமங்கை ரயில்வே கேட் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 05:52 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து உத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது உள்ளூர், வெளியூர் வாகன ஓட்டிகள் காத்திருந்து சிரமப்படுகின்றனர். எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமாக உத்தரகோசமங்கை சிவன் கோயில் உள்ளது. இக்கோயில், அருகேயுள்ள வராஹி அம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மதுரை தேசியநெடுஞ்சாலை வழியாக வரும் வாகனங்கள் ராமநாதபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தரகோசமங்கைக்கு செல்லும் வழியில் வேளாண் வணிக வளாகம் அருகேயுள்ள ரயில்வே கேட் மூடப்படும் போது நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
பாம்பன் புதிய ரயில்வே பாலம் திறப்பிற்கு பின்னர் ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதனால் உத்தரகோசமங்கை செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடும் நிலை உள்ளது.
எனவே பயணிகள் சிரமத்தை தவிர்க்க மேம்பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

