/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
/
துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 28, 2025 03:35 AM
கமுதி: கமுதி அருகே செங்கோட்டைபட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தினர்.
செங்கோட்டைபட்டி கிராமத்தில் 1400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் 5 கி.மீ.,ல் உள்ள பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. மேல் சிகிச்சைக்காக முதுகுளத்துார், கமுதி அரசு மருத்துவமனை செல்கின்றனர். பாம்பு கடித்தல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு முதலுதவி, பரிசோதனை செய்வதற்கு கூட 5 கி.மீ., செல்லும் நிலை உள்ளது.
இரவு நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பஸ் வசதி இல்லாததால் சரக்கு வாகனம், டூவீலரில் அழைத்து செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. பேரையூர் அருகே செங்கோட்டைபட்டி அதனை சுற்றி சாமிபட்டி, சேர்ந்தகோட்டை, மேட்டுப்பட்டி, கீழவலசை உள்ளிட்ட கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
மக்களின் வசதிக்காக செங்கோட்டைபட்டி கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

