/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதிய நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் விசாரிப்பதில் தாமதம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
/
போதிய நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் விசாரிப்பதில் தாமதம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
போதிய நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் விசாரிப்பதில் தாமதம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
போதிய நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் விசாரிப்பதில் தாமதம் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
ADDED : டிச 14, 2025 06:30 AM

ராமநாதபுரம் டிச.14-: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றத்தில் போதிய அளவில் நீதிபதிகள் நியமிக்கப்படாததால் வழக்குகளை விசாரிக்க தாமதமாகிறது.
காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமாரிடம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அன்புசெழியன் கோரிக்கை விடுத்தார்.
ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் உயர்நீதிமன்ற நீதிபதியுமான சுரேஷ்குமார் பங்கேற்று விபத்து காப்பீட்டில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.28 லட்சம் காசோலை வழங்கினார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
நீதிபதி சுரேஷ்குமாரிடம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்புசெழியன் மனு அளித்தார். அதில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை அமைப்பது, நீதிமன்றத்தில் மின்துாக்கி வசதி ஏற்படுத்துவது, நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். தொடர்ந்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமையில் லோக் அதாலத் நடந்தது.
கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி கவிதா, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெய சுதாகர், சார்பு நீதிபதிகள் மும்தாஜ், நீதித்துறை நடுவர் நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்திரினி ஜெபா சகுந்தலா ஆகியோரின் அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி வாராக் கடன்கள், சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. மொத்தம் 2768 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1415 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் 6 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 233 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீதிபதி பாஸ்கர் ஏற்பாடுகளை செய்தார்.

