/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அறிவு சார் மைய நுாலகம் போட்டி தேர்வர்களுக்கு வாய்ப்பு
/
பரமக்குடி அறிவு சார் மைய நுாலகம் போட்டி தேர்வர்களுக்கு வாய்ப்பு
பரமக்குடி அறிவு சார் மைய நுாலகம் போட்டி தேர்வர்களுக்கு வாய்ப்பு
பரமக்குடி அறிவு சார் மைய நுாலகம் போட்டி தேர்வர்களுக்கு வாய்ப்பு
ADDED : டிச 14, 2025 06:29 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மணி நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்ட அறிவு சார் மைய நுாலகம் போட்டி தேர்வர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பரமக்குடி நகராட்சியால் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவு சார் மைய நுாலகம் கட்ட 2023 ஏப்., மாதம் பூமி பூஜை செய்யப்பட்டது. பணிகள் நிறைவடைந்து அக்.,3ல் முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் நடந்த விழாவில் நுாலகத்தை திறந்தார்.
பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நவ., முதல் நுாலகம் செயல்பட துவங்கியுள்ளது.
இங்கு குழந்தைகள், பள்ளி மாணவர்கள் படிப்பதற்கு தனி இட வசதி உள்ளது. போட்டி தேர்வர்களுக்கு என பிரத்யேகமாக நவீன வாசிப்பு அறை, ஆன்லைன் நூலகம், கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலை 10:00 மணிக்கு திறக்கப்படும் நுாலகம் மாலை 6:00 மணி வரை இயங்குகிறது. ஏராளமான புத்தகங்கள் உள்ள சூழலில் போட்டி தேர்வர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
தற்போது இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படாத நிலையில் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும், தினசரி நாளிதழ்கள் வாங்கப்பட உள்ளதாகவும், தெரிவிக்கின்றனர். ஆகவே கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைதியான சூழலில் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்தி தேர்வுகளை எதிர் கொள்ள முடியும் என்பதால் நூலகம் வரபிரசாதமாக அமைந்துள்ளது என தேர்வர்கள் தெரிவித்தனர்.
மேலும் வரும் நாட்களில் நுாலகத்தை கண்காணிக்க கூடுதல் பணியாளர்களை நியமித்து, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

