ADDED : மார் 17, 2025 08:01 AM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி ரோடு சித்திரங்குடி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் பட்டுப்போகும் நிலையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் கமுதி ரோடு சித்திரங்குடி, கீழக்காஞ்சிரங்குளம் ரோட்டோரத்தில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அதன்பின் முறையாக பராமரிக்காததால் ஏராளமான மரக்கன்றுகள் பட்டுப்போய் வீணாகியுள்ளது.
இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடந்த ஆண்டு நடப்பட்ட மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
