/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
/
புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
ADDED : மே 07, 2025 01:41 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாநிலத்தலைவர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும். புதிய பஸ் ஸ்டாண்டிற்கு நகராட்சி பஸ் ஸ்டாண்ட் என பெயரிட வேண்டும். ராமநாதபுரத்தில் சேதமடைந்த சாலைகள், சாக்கடைகள் சீரமைக்க வேண்டும்.
தேவிபட்டினம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். மத்திய அரசு கல்வி கடன்களை ரத்து செய்ய வேண்டும், வக்ப்வாரிய திருத்த சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர். சிறப்பு அழைப்பாளர்களாக காரல்மார்க்ஸ் கம்யூ., மாநில தலைவர் குருசாமி, மாநில செயலாளர் கலைமணி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.