/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை
/
விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை
ADDED : டிச 11, 2025 05:19 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரி தமிழ்நாடு வைகை விவ சாயிகள் சங்கத்தினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
நிறுவனத் தலைவர் பாக்கியநாதன் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.37 லட்சம் ஹெக்டேர் பயிரிடப்பட்டது. இதில் 78 ஆயிரம் ஹெக்டேரில் அறுவடைக்காக இருந்த நெற்கதிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் மீண்டு முளைத்துள்ளன. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதே போல் கடந்த ஆண்டு 16,500 ஹெக்டேரில் செய்யப்பட்ட மிளகாய் சாகுபடி முழுமையாக அழிந்தது.
தற்போது வரை நிவாரணமோ, தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகையோ வழங்க வில்லை. நெல், மிளகாய் சாகுபடி செய்த விவசாயிகள் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு காப்பீட்டு தொகை, நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.

