/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை நீதிமன்றத்தில் டிச.13ல் லோக் அதாலத்
/
திருவாடானை நீதிமன்றத்தில் டிச.13ல் லோக் அதாலத்
ADDED : டிச 11, 2025 05:19 AM
திருவாடானை: திருவாடானை நீதி மன்றத்தில் டிச.,13ல் லோக் அதாலத் நடக்கிறது என வட்ட சட்டப் பணி குழு அலுவலர்கள் தெரிவித்தனர்.
திருவாடானை நீதி மன்றத்தில் டிச., 13ல் லோக் அதாலத் நடக்கிறது. இதில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்திற்கு எடுத்துக் கொள்ள கூடிய கிரிமினல் வழக்குகள், பண மோசடி, வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், வங்கி சார்ந்த வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரே நாளில் தீர்வு காணப்படும்.
கோர்ட்டுகளில் நிலுவையில் இல்லாத வங்கிக் கடன் வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும். பொதுமக்களும், வழக்காடிகளும் வழக் கறிஞர்கள் மூலமாக இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று வட்ட சட்டப் பணிக் குழு அலுவலர்கள் தெரிவித்தனர்.

