/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையதள சேவை குறைபாடு
/
கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையதள சேவை குறைபாடு
கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையதள சேவை குறைபாடு
கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையதள சேவை குறைபாடு
ADDED : டிச 11, 2025 05:19 AM
கீழக்கரை: கீழக்கரை முனீஸ்வரம் பகுதியில் தாலுகா பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஐந்து மாதங்களாக இணையதள சேவை குறைபாட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
உத்தரகோசமங்கை, கீழக்கரை, களரி உள்ளிட்ட 18 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு பத்திரப்பதிவு அலுவலகத்தின் மேல் தளத்தில் பொருத்தப்பட்டிருந்த தனியார் தொலை தொடர்பு சேவை கோபுரம் காற்றின் வேகத்தால் சேதமடைந்து கீழே விழுந்தது.
அதன் பின் அவற்றை சரி செய்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளா மல் விடப்பட்டதால் இணையதள சேவை குறைபாடு ஏற்பட்டு வருகிறது. பத்திரத்தின் மூலம் சொத்து வாங்குவதற்கும், சொத்து விற்பனை செய்வதற்கும் நகல் பதிவது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்கும் அரசு தொடர்பான நகல்களை எடுப்பதற்கும் பத்திரப்பதிவு அலு வலகத்திற்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சம்பந்தப் பட்ட பயனாளிகளின் கைரேகை மற்றும் கண் விழி லென்ஸ் ஆகியவற்றை கண்டறியக்கூடிய கருவி பயன்பாட்டில் இல்லாமல் தற்போது வரை காட்சி பொரு ளாகவே உள்ளது. பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூறியதாவது:
கடந்த ஐந்து மாதங் களுக்கும் மேலாக கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரமும், அதனை ஒட்டி இரு கண் விழிகளை பரிசோதிக்க கூடிய ஸ்கேனர் இயந்திரமும் பழுதாகி உள்ளது. இதற்கு முக்கிய பயன்பாடாக உள்ள இணையதள சேவை இதுவரை நிவர்த்தி செய்யப்படவில்லை.
இதனால் பத்திரங்கள் பதிவதிலும் முக்கிய சான்றுகள் பெறுவதிலும் பெரும் இழுபறியும் சிக்கலும் ஏற்படுகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் மூலமாக இணைய சேவையை பயன்படுத்தினாலும் அரை மணி நேரத்தில் முடிய வேண்டிய பணி இரண்டு மணி நேரம் ஒருவருக்கு தாமதமாக கிடைக்கிறது.
எனவே பத்திர பதிவுத் துறை அதிகாரிகள் கீழக்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள இணையதள குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏராளமானோர் தினமும் காத்திருந்து அலைச் சலுடன் மன உளைச்சலும் ஏற்பட்டு செல்கின்றனர். இவ்விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

