/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு... l எச்சரிக்கை மரக்கன்று நடுவதை தடுத்தால் போலீஸ் நடவடிக்கை

ADDED : டிச 11, 2025 05:21 AM

ராமநாதபுரம் :ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவ்விடங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது. இப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீசார் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் எச்சரித்துள்ளனர். மாவட்டத்தில் பரவலாக தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. பசுமையாக்கல் திட்டத்தில், தற்போது சுற்றுச்சூழல் துறை, வனத்துறை, வேளாண் துறை, கண்மாய்கள், ஊருணி மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள், பூங்காக்கள், சாலையோரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகள், பனைவிதைகள் மூலம் நடும் பணி நடக்கிறது.
இதன்படி ராமநாதபுரம் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறி யாளர் முருகன் மேற் பார்வையில் அச்சுந்தன்வயல், கூரியூர் ஊராட்சி களுக்கு உட்பட்ட மதுரை நெடுஞ்சாலை யோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி நடக்கிறது.
அப்போது சில ஆக்கிர மிப்பாளர்கள் நெடுஞ் சாலைத்துறை பணியாளர் களுடன் வாக்குவாதம் செய்து மரக்கன்றுகள் நடும் பணியை தடுத்து இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர இடங்களை கண்டறிந்து 1500 நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை தவிர்க்க அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
இப்பணிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாறாக இடையூறு செய்பவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.